முத்துக்குளித்துறையில் வாழும் பரத குல மக்களும், உள் நாட்டில் வாழும் பலதரப்பட்டு மக்களும் பனிமயத் தாயின் பேராலயத்தை ஆண்டு முழுவதும் தரிசித்து அவளது அற்புதங்களைப் பெற்றுச் செல்வது அனைவரும் அறிந்த உண்மை. இந்த எழில் மிகு பேராலயம் முத்துநகரில் உருவானதே அன்னை செய்த மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகக் கருதலாம். இன்று 425 ஆண்டுகளாக முத்துநகரை அலங்கரித்து வரும் இப்பேராலயத்தின் ஆரம்ப வரலாறு கற்போரின் மனதை நெகிழ வைக்கும் அற்புதமும், அதிசயமும் நிறைந்த ஒன்றாகும். இந்த அற்புத, அதிசயமான வரலாற்றை இங்கு தொகுத்தறிவோம். மேலும் ►
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது இந்து மற்றும் இஸ்லாமிய சமயத்தவர்களும் கொண்டாடும் ஒரு திருவிழா தூய பனிமய அன்னை போரலய திருவிழாவாகும். இத்திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாள் கொண்டாடபடுகிறது. உரோமை நகரில், கடும் கோடை காலத்தில் தேவதாய் அதிசயமாக பனி பொலிய செய்த அற்புதம் நிகழ்ந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாளில் முத்துமாநகரில் இரக்கத்தின் அன்னை ஆலயம் 1582ஆம் ஆண்டு அர்சிக்கப்பட்டது. அந்நாள் முதல் தூய பனிமய தாயின் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாள் பரம்பரிய, பக்தி சிறப்புடன் கொண்டாடபடுகிறது. மேலும் ►
ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரக் கிளர்ச்சியில் ஈடுப்பட்டிருந்த சிற்றரசர்களுக்கு, ஆளுதவியும், பொருளுதவியும், அடைக்கலமும் தந்து உதவியதற்காக ஆங்கிலேயரால் குற்றவாளி ஆக்கப்பட்டிருந்த எழுகடல் துறை மன்னன் சிஞ்ஞோர் சிஞ்ஞோர் தொன் கபிரியேல் தெக்குருஸ் வாஸ் கோமஸ் ஜாதித் தலைவ மோர் அவர்கள், அன்னையின் கடாட்சத்தினால் கொடிய தண்டுனையிலிருந்து தப்பினார். அவ்வேளையில் அன்னையின் திருச்சுருபம் நகரை வந்தடைந்த 250-ம் ஆண்டும் நெருங்கியது. ஆதியிலிருந்து இந்நாள் வரை திருச்செந்தூர் கந்தனின் தேர்வடுத்தை முதன் முதலில் தொட்டுக் கொடுக்கும் கவுரவ உரிமைக்குத் தன் ராஜினமா அறிக்கையின் மூலம் மறுப்பு தெரிவித்துவிட்டு தன் குல தெய்வம் “பரதர் மாதாவுக்கென்று” ஒரு தேர் செய்ய சித்தமானார். மேலும் ►
திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருவிழா நவநாட்களின் போது "தேர்ஸ்" என்ற வழிபாடு நடைபெறுவது வழக்கம். மதியம் மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் இவ்வழிபாடு செபமாலை, தஸ்நேவிஸ் மாதா மன்றாட்டு, நற்செய்தி, மறையுரை மற்றும் அருளிக்க ஆசீருடன் நிறைவுபெறும். மேலும் ►