பனியமே வனிதா ரமணி பாரத ராணி நீ பரம கல்யாணி நீ – பனிமயமே
புனித குமாரி நீ பூபதிகாரி நீ புண்ணிய வான்நிதி பூதசங்காரி நீ – பனிமயமே
கனவிலும் நினைவிலும் கரை கடலெங்கும் காலமெல்லாம் எங்கள் கருத்தினில் தங்கும் கணமே வரமருள் சுகமே கவினுயர் தாயவிமலர் மது கரமே நிகர் இல்லாத மறை அவர் புகழ் நவ நிதியே
பனி குளிர் கடு நிசியினில் நீ தனவனய நீ தவம் புவி மேல் அருளிய தயா பரியே – அதிமகத்துவ மனோகரியே ஸ்துதி படைத்த சர்வேஸ்பரியே
பவகுமனும் கொடுமையில் அரவருள் உனது பதமலர் என்பது தரும் நிழலே தினகரனொடு மலருடு மதி சுடர் அது திகழ்வதில் அதன் பொருள் உனை அடைவார்.
நினைக்கும் – எதற்கும் – புரக்கும் –சுரக்கும் நிஜத்தை புகட்டும் சமத்துவமே– தருணமே – மரியே மதிபதாம் மலரே சரணமே ஹம்சவத் தொணி – பனிமயமே